பெரம்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தன்புஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கோகா வெங்கட சந்தோஷ் அபிஷேக். இவர் கடந்த 15ம் தேதி இரவு 8 மணி அளவில் அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் இருந்து சென்ட்ரல் செல்வதற்காக மின்சார ரயிலில் பயணம் செய்தார். ரயில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று புறப்படும் போது இரண்டு பேர் கோகா வெங்கட சந்தோஷ் அபிஷேக் வைத்திருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு ரயிலில் இருந்து இறங்கி பெரம்பூர் இருப்பு பாதை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். பெரம்பூர் இருப்பு பாதை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (22) என இரண்டு பேரை கைது செய்தனர்.
