56 வயது கள்ளக்காதலியை கொன்ற 28 வயது வாலிபர்

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஆனந்தராஜ் (28). கூலித்தொழிலாளியான இவர், வேலைக்காக கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி சென்றார். அப்போது அங்கு திருமணமான பவானி (56) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் தகாத உறவாக மாறியது. இதையடுத்து ஆனந்தராஜ், பவானியுடன் கங்கணம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தார். பின்னர் திருப்பூரில் வேலை பார்த்து வந்த இருவரும், கோயில் திருவிழாவிற்காக கங்கணம்புத்தூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்‌.

நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தராஜ், பவானியிடம் சமைக்கவில்லையா என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், பவானியை தாக்கியதோடு வீட்டில் இருந்து கத்தியை எடுத்து குத்தினார். இதில் படுகாயமடைந்த பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பவானி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தராஜை நேற்று கைது செய்தனர்.

Related Stories: