நீட் முறைகேடு – தேசிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்: கெஜ்ரிவால்

டெல்லி: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே லீக்காகிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு றது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தேசிய அளவில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருக்கிறார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான தனது அறிக்கையில், “ஒவ்வொருஆண்டும், 7 கோடி இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், அரசுப் பணிகளைப் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அரசியல் ஆதரவுடன் செயல்படும் வினாத்தாள்களை கசிய விடும் கும்பல்கள், இந்த இளைஞர்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் சிதைத்து வருகின்றன” என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

தேர்வுக்கு முன்பே வினாத்தாள்களை கசிய விடுவதில் ஈடுபட்டுள்ள மாஃபியா கும்பல்களும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தலைவர்களும் நாட்டின் முக்கிய எதிரிகளாவர். இவர்கள் தேசத்தின் அடித்தளத்தையே அரித்துச் சிதைத்து வருகின்றனர். அரசுகளும் இந்த குற்றத்தில் கூட்டாளிகளாக மாறியுள்ளன. எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் நாடு தழுவிய அளவிலான, தீர்க்கமானதொரு போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories: