நிபந்தனைகளுக்கு உட்பட்டால் நிறுவனங்களில் 25% வரை அப்ரன்டிஸ்களுக்கு அனுமதி: ஒன்றிய அரசு அதிகாரி தகவல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) வருடாந்திர வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக செயலாளர் தேபஸ்ரீ முகர்ஜி பேசியதாவது:
பல பெரிய தொழில்துறை நிறுவனங்கள் தற்போதுள்ள 2.5 முதல் 15 சதவீத வரம்புக்கு பதிலாக 25 சதவீதம் வரை அப்ரன்டிஸ்களை (தொழிற்பயிற்சி பெறுவோர்) நியமிக்க அனுமதி கோரியுள்ளன. தற்போது இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் அப்ரன்டிஸ்களாக உள்ளனர். நிறுவனங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 25 சதவீதம் வரை அப்ரன்டிஸ்களை நியமிக்க 4 நிபந்தனைகள் உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் நீங்கள் 15 சதவீத அப்ரன்டிஸ்கள் நியமன வரம்பை எட்டியுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விட குறைந்தது 30 சதவீதம் அதிக ஊதியம் வழங்க வேண்டும். பணியமர்த்தும் அப்ரன்டிஸ்களில் குறைந்தது 35 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும். இதன் மூலம் அப்ரன்டிஸ்களை மலிவான உழைப்பாக மட்டும் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம் என்றார்.

Related Stories: