இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் பதற்றம் !

இமாச்சலப் பிரதேசம்: கின்னூர் மாவட்டத்திலுள்ள பாவ்நகர் (Bhabanagar) சந்தைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை – 5 (NH -5) பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து பாறைகளும் மற்றும் இடிபாடுகளும் சரிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள தனியார் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகளே இந்த நிலச்சரிவு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலச்சரிவில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் தெரிவித்தனர். மேலும், நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: