மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணியை நடத்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை செயலாளர் பதவி: பா.ஜ முதல்வர் சுவேந்து அதிகாரி தாராளம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து எஸ்ஐஆர் பணியை நடத்திய மனோஜ் அகர்வால் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணி நடத்தப்பட்டது. இதில் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சுமார் 60 லட்சம் பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இந்த பணிகளை மேற்கொண்ட மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தேர்தல் முடிந்த பிறகு அமைந்த முதல் பா.ஜ அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை முதல்வர் சுவேந்து அதிகாரி பிறப்பித்துள்ளார். தற்போதைய தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த துஷ்யந்த் நரிவாலா, டெல்லியில் உள்ள முதன்மை உறைவிட ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 1993-ஆம் ஆண்டு தொகுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியான நரிவாலா, மாநிலத்தின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியான தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்த நந்தினி சக்ரவர்த்தியை நீக்கிவிட்டு, தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளராக தேர்தல் நேரத்தில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: