விரைவில் உயர்கிறது அத்தியாவசிய பொருட்களின் விலை! பொதுமக்கள் அச்சம்..

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஓரிரு நாட்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது.

இதனை ஈடுகட்டும் விதமாக பெட்ரோல் விலையை ரூ.7-வரை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளில் பயன்படுத்தும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் ரூ.50-வரை உயர்த்தலாம் என கூறப்படுவதால் பொதுமக்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே ஒன்றிய அரசு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை ரூ.993 உயர்த்தியதால் உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்து சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை பார்க்கும் பலர் அவதிபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: