திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

பொள்ளாச்சி, பிப். 26:   பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கடந்த சில நாட்களாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பலர் போட்டிபோட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதில் நேற்று, பொள்ளாச்சி நகர திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், தனது ஆதரவாளர்களுடன், பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாநில ஆதித்திராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, நகர அவைத்தலைவர் வடுகை பழனிசாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாணிக்கராஜ், தர்மராஜ், சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் அருள், நவநீதகிருஷ்ணன், தமிழ்செல்வன், ஜெயக்குமார், ஆறுமுகச்சாமி, வட்ட செயலாளர்கள் ஜெய்லாப்தீன், வடிவேல், ஆசிப், ரியல்செந்தில், ராசு, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>