அமராவதி: ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பல மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. திருப்பதி, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளது.
