கோத்தகிரி அருகே வெயிலின் தாக்கத்தால் பச்சக்காடு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்தது

கோத்தகிரி,ஏப்.25: கோத்தகிரி அருகே உள்ள பச்சக்காடு நீர்வீழ்ச்சி வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை பகுதியில் பச்சக்காடு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சமவெளிப்பகுதிகளில் இருந்து மலைப்பகுதியை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்த இந்த நீர்வீழ்ச்சி தற்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இந்த தண்ணீரை நம்பி கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் மலைத்தோட்ட காய்கறிகளான முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட மலைகாய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இனிவரும் காலங்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயத்திற்கு ஏற்ற நீர்வரத்து கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: