ஊட்டி, ஏப். 22: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தொகுதியில் உள்ள வாக்குசாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரித்து தயார் நிலையில் ைவக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 736 வாக்குச்சாவடி மையங்களில் 3,532 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த வாரம் 3 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் நேற்று நடந்தது.
