பைக்காரா, பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 120 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

 

ஊட்டி, ஏப்.21: பார்சன்ஸ்வேலி அணைப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் 120 ஏக்கர் வனப்பகுதி நாசமாகியுள்ளது. நெருப்பை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். வனப்பரப்பு மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் உறைபனி பொழிவு நிலவும். இதனால் வனப்பகுதிகளில் பசுமை குறைந்து செடி,கொடிகள் காய்ந்து காணப்படும். மார்ச் துவங்கி மே வரை கோடை காலம் என்பதால் வறட்சியான காலநிலை நிலவும்.  இந்நிலையில் இந்த ஆண்டு சமவெளி பகுதிகளுக்கு நிகராக நீலகிரியிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் புதர்கள் காய்ந்து காணப்படுவதால், காட்டுத் தீ பரவும் அபாயம் நீடித்தது.

Related Stories: