ஊட்டி, ஏப். 22: வாக்களிக்க ஏதுவாக கோத்தகிரி வட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு) ஹேமலதா கூறியதாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு கோத்தகிரி வட்டத்தில் உள்ள தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், தற்காலிக பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் ஆகியோர் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். எனவே, தேர்தல் நாளன்று பொது விடுமுறை வழங்காத ேதாட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுமுறை அளிக்காத தோட்ட நிறுவனங்கள் குறித்து ேகாத்தகிாி தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள்) ேஹமலதா – 8825690990, 04266-273898 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
