திமுகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல் நிர்வாகிகள் 2 பேர் படுகாயம்

 

கோத்தகிரி,ஏப்.21: குன்னூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாந்திராமு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உறவினரின் தேயிலை தொழிற்சாலை மற்றும் நிலத்தை போலி முத்திரைத்தாள் மூலம் மோசடி செய்தது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.  இந்நிலையில் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் திமுகவினர் நேற்று பிரசாரம் மேற்கொண்டு இருந்தபோது சாந்திராமு ஆதரவாளர்கள் உலிக்கல் பேரூர் தேர்தல் பொறுப்பாளர் கோவர்தன், உலிக்கல் சிவாஜி ஆகியோர் மீது கடுமையாக கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: