100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊட்டி ஏரியில் படகு போட்டி

 

ஊட்டி, ஏப்.21: 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊட்டி ஏரியில் படகு போட்டி நடந்தது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சர்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்திற்கு நீலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories: