ஆரல்வாய்மொழி அருகே 5,600 ேகாழிகளை விஷம் கலந்து கொன்ற வாலிபர் கைது

ஆரல்வாய்மொழி, பிப்.23: ஆரல்வாய்மொழி அருகே தொழில் போட்டியால் குடிநீரில் விஷம் கலந்து 5,600 கோழிகளை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் திட்டுவிளை அடுத்த மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (28). இவர், செண்பகராமன்புதூர் அவ்வையாரம்மன் கோயில் அருகில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். துவரங்காடு மத்தியாஸ்நகரை சேர்ந்த சாஜன், துவரங்காட்டை சேர்ந்த ராமன் மகன் சுரேஷ் ஆகியோர் ராஜனின் கோழிப்பண்ணையை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் சாஜன், கோழி தீவனங்களை திருடி விற்று வந்தார். இதனால் சாஜனுக்கு, கோழி தீவனம் ெகாடுப்பதை  நிறுத்தினர். இதனால் சாஜன், கோழிப்பண்ணையில் இருந்து சென்று விட்டார். இந்த பிரச்சினைக்கு சுரேஷ் தான் காரணம் என நினைத்து அவர் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். சம்பவத்தன்று சுரேசை தேடி, கோழிப்பண்ணைக்கு வந்த சாஜன், அங்கிருந்த காவலாளிகளை மிரட்டி, சுரேஷ் எப்படி பண்ணை நடத்துகிறான் என்பதை பார்ப்போம் என கூறி மிரட்டியதுடன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்தை கலந்துள்ளார். விஷம் கலந்த தண்ணீர் குடிக்கும் போது, சுரேஷ் இறந்து விடுவார் என எண்ணினார்.

ஆனால் இந்த தண்ணீரை குடித்த 5,600 கோழிகள் உயிரிழந்தன. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு விசாரணை நடத்தி சாஜன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 429, 294 (பி), 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  தலைமறைவாக இருந்த சாஜனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னை தப்பி செல்வதற்காக ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கி இருந்த சாஜனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர். தொழில் போட்டி காரணமாக சாஜன், இந்த கொடூர செயலை செய்ததாக கூறப்படுகிறது. கோழிபண்ணையை  நடத்தி வந்த சுரேசை கொலை செய்ய வேண்டும் என திட்டமாட்டார். ஆனால் திசை மாறி ேகாழிகள் இறந்து விட்டதாக சாஜன் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பூதப்பாண்டி முக்கடல் ரோடு பகுதியை சேர்ந்த எப்ரான் (25) என்பவரையும், சாஜன் மிரட்டி உள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் சாஜன் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: