மான் வேட்டையாடியவர் அதிரடி கைது

 

சேலம், மே 27: சேலம் சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி கோட்டார் வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, காட்டிற்குள் இருந்து ஒருவர் வந்தார். அவரை வன ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். அவரிடம் 10 கிலோ மான் கறி இருந்தது. அவர், காட்டிற்குள் சென்று மானை வேட்டையாடி கறியை எடுத்து வந்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் அவர், தாழ்கோவிலூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தசாமி (எ) கந்தன் (51) எனத்தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது சேர்வராயன் வடக்கு வனச்சரகத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர், கைதான கந்தசாமியை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மான் வேட்டையாடியவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: