திருச்சி அடுத்த புள்ளம்பாடி மகளிர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் சேர்க்கை துவக்கம்

 

திருச்சி. மே27: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திருச்சியில் மாவட்டம் புள்ளம்பாடியில் இயங்கும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது புதிய சேர்க்கை ஆரம்பித்துள்ளது. எனவே சேர விருப்பம் உள்ள மகளிர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க www.skilltraining.tv.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக வந்தும் விண்ணப்பிக்கலாம். எனவே 10ம் குப்பு முடித்த மகளிர் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இந்த தொழிற் பயிற்சி மையத்தில் எலக்ட்ரானிக் மெக்கானிக், மெஷினிஸ்ட், ஸ்டெனோகிராபி, கோபா(கணினி பிரிவு), டெஸ்க்டாப் பப்ளிஷிங் (கணினி பிரிவு), மல்டிமீடியா அனிமேசன்( கணினி பிரிவு), டிரெஸ் மேகிங் (தையல் வேலை), எம்ப்ராய்டரி (ஆரி ஒர்க்), போன்ற படிப்புகள் பயிற்சி கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் வயது வரம்பு இல்லை, மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750, புதுமைபெண் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மகளிருக்கு கூடுதலாக மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள் (ம) வரைபடக்கருவி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9443997026, 9994540453, 9944058729, 9384491123 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம்.

The post திருச்சி அடுத்த புள்ளம்பாடி மகளிர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: