புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் தேர்தல் நிறைவடைந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பை அவசர அவசரமாக செய்ய வேண்டிய தேவையே இல்லை. நிதானமா விவாதிச்சு செய்ய வேண்டிய வேலை. எப்பவுமே பாஜ, இப்படி திட்டமிட்டு ஒவ்வொன்னையும் திருப்பும்.
சிஏஏ, என்ஆர்சி, எஸ்ஐஆர், சிறப்பு வாக்காளர் திருத்தம்னு இந்த மாதிரி வேலைகளை கொண்டு வந்து மக்களை எப்பவுமே ஒரு பதட்டத்துல வச்சுக்கிறது, அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு. அன்னைக்கு விடுதலை பெற்ற பிறகு 543 நாடாளுமன்றம் கொண்டு வந்தீங்க. அன்னைக்கு இருந்த மக்கள் தொகை இன்னைக்கு இருக்கா? இன்னைக்கு 150 கோடிய தொட்டுருச்சு. அப்படின்னா 6 சட்டமன்றத்துக்கு ஒரு நாடாளுமன்றம்னு இருந்ததை மாத்தி, 3 சட்டமன்றத்துக்கு ஒரு நாடாளுமன்றம்னு கொண்டு வந்தாதான் எனக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். அப்படி கொண்டு வரவில்லை.
என்ன சீர்திருத்தம் பண்ண போறீங்கன்னு சொல்லுங்க, மக்கள் தொகை அடிப்படையிலன்னா, குடும்ப கட்டுப்பாட்டை கொண்டு வந்து நம் மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திட்டாங்க. மற்ற மாநிலங்களில் உத்தரபிரதேசத்துல அவங்களுக்கு அதிகமா வந்துரும். மக்கள் தொகை எண்ணிக்கையல வந்தா எனக்கு குறைஞ்சிரும். அப்படி வரக்கூடாது. பாஜவுக்கு படிப்பறிவு இருந்து என்ன பண்ணினார்கள்? மதத்தை முன்னிறுத்தி உலகத்துல எவனாவது அரசியல் செய்வானா? இது படிச்சவன் செய்யுற செயலா? மதம் அரசாளலாமா? மதம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தா அங்க மனிதநேயம்னு ஒன்று செத்தே போயிரும். இது படிச்சவன் செய்யுற செயலா?. மறுசீரமைப்பு செய், தேர்தல் முடிஞ்சவுடனே செய். இவ்வாறு அவர் கூறினார்.
* எங்கேயும் போறதுல்ல… விஜய் யாருக்கு போட்டி?
‘‘எடப்பாடியில் தவெக வேட்பாளரை விலைக்கு வாங்குனதுன்னு சொல்றாங்களா, இல்ல அவருக்கு அந்த கட்டுத்தொகை போட்டதுல பிரச்சனையா என்னன்னு நமக்கு தெரியல. ஆனா அது மாற்று வேட்பாளராவது சரியா போட்டு இருந்தா அவராவது நின்று இருக்கணும். அப்ப ரெண்டு பேரும் வரும்போது சந்தேகமா இருக்கு. தம்பி விஜய் பேசும்போதெல்லாம் எனக்கும், திமுகவுக்கும், அதிமுவுக்கும், விசிகவுக்கும், ஸ்டாலினா, விஜயகாந்தாங்குறாப்ல. ஆனா எடப்பாடி தொகுதிக்குள்ள போட்டி போடல. அந்த தொகுதிக்கு அவரு போகல. சரி போட்டி போடல, தம்பி உதயநிதி தொகுதிக்கு போகல. முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிக்கு போகல. நேரடியா என் தொகுதிக்குதான் வறாரு. இப்ப யாருக்கு போட்டியா வந்து இறங்கி வேலை செய்றாருங்கிறத நீங்க பாக்கணும். காரைக்குடியில் அவர் பேசாமல் சென்றுள்ளார், அப்படி பேசியிருந்தால் ஒரு பிடல் காஸ்ட்ரோ, மார்ட்டின் லூதர்கிங், மால்கம் எக்ஸ் மாதிரி பேசிருப்பாரா. பேசியிருந்தா தலைகீழா மாத்திட்டு வந்திருப்பாரா. இவ்வாறு அவர் கூறினார்.
* மோடி நினைச்சா டிரம்ப்பையே மிரட்டுவாராம்; ஓவரா கூவும் குஷ்பு
பாஜ மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு, மதுரை விமான நிலையத்தில் நேற்று கூறுகையில், ‘‘பிரதமர் மோடியிடம் பேசிவிட்டு தான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பே கூறியுள்ளார். உலகத்தில் சிறந்த தலைவர் என மோடியை அனைவரும் கூறுகின்றனர். அவர் நினைத்தால் மிரட்டலாம். நாங்கள் மிரட்டுவதற்கான ஆளில்லை. ரத்தம், வியர்வை சிந்தி ஒரு உழைப்பை போட்டு படத்தை எடுக்கிறார்கள். ஜனநாயகன் படம் வெளியானதில் திரைக்கு பின்னால் இருப்பவர்களின் உழைப்பு வீணாக போயுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய்க்கு பின்னால் வரும் கூட்டம் குறித்து மே 4ம் தேதிக்கு பிறகு தெரியும்’’ என்றார்.
* டெல்லியை தட்டுனேன் கதவு தொறந்திடுச்சு: டிடிவி ஓபன் டாக்
தேனி மாவட்டம், போடி பஸ் ஸ்டாண்ட் அருகே தேவர் சிலை திடலில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்றுமாலை பிரசாரம் செய்தார். அப்போது டிடிவி.தினகரன் பேசுகையில், ‘‘உடல்நிலை சரியில்லை. மருத்துவ சிகிச்சை பெற்று நாராயணசாமிக்காக ஓட்டு கேட்க வந்தேன். பிரதமர் மோடி நாகர்கோவில் வந்தார். நான் போடிக்கு போறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். அமமுக, திமுகவுடன் கூட்டணி பேச்சு என்று அடிபட்டது. அது சும்மா. அழுத பிள்ளைதானே பால் குடிக்கும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். டெல்லியை தட்டுனேன். திறந்திடுச்சு கதவு’’ என்றார்.
