மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் போட்டியிடும் அருள் எம்எல்ஏவுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திடீரென மயக்கமடைந்தார். அவரை உடனடியாக நிர்வாகிகள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அங்கு, சிறப்பு மருத்துவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து, நேற்று மாலை 3 மணி அளவில், அவர் அப்போலோ மருத்துவமனையில் இருந்தது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: