அம்ரோஹா: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
அம்ரோஹா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்து உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், உள்ளூரில் இருக்கும் ஒரு மந்திரவாதியை அவசரமாக நாடி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மகனை அழைத்து சென்ற மந்திரவாதியோ பாம்பு கடிக்கு பரிகாரமாக பாதிக்கப்பட்ட அந்த சிறுவனை கங்கை நதியில் மூழ்கியவாறு இருக்குமாறு மூங்கிலால் ஆன மிதவையில் கட்டி தொங்கவிட கூறி இருக்கிறார். இப்படி செய்தால் பாம்பு விஷம் முறியும் என்று நம்பி தங்களது மகனை மந்திரவாதி அறிவுறுத்தியப்படி நீரில் மூழ்கடித்து வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் கங்கை நீரில்
கண்மூடித்தனமாக மூடநம்பிக்கைகளை பின்பற்றும் பெற்றோருக்கு மகனாக பிறந்த அந்த 14 வயது சிறுவன் மூங்கில் மிதவையில் படுக்க வைக்கப்பட்டு, கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு உள்ளான். இறுதியில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பலருக்கும் வேதனை அளித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த குறிப்பிட்ட வீடியோவில் கயிறுகளின் உதவியுடன் நீரில் மிதக்க விடப்பட்டிருந்த மூங்கில்களால் ஆன மிதவை ஒன்றில் அச்சிறுவன் பிணைக்கப்பட்டிருந்தான். மூடநம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசித்திர செயலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அறிய காத்திருந்த மக்கள் கூட்டமும் அச்சிறுவனைச் சூழ்ந்து நின்ற காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. எனினும் பாம்பு கடித்ததால் சிறுவனின் உடலில் பரவிய நஞ்சு காரணமாக இறுதியில் அந்த சிறுவன் உயிரிழக்க நேரிட்டது.
பாம்பு கடித்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் மிக எளிதாகக் காப்பாற்றியிருக்க கூடிய ஒரு இளம் உயிர் வீணாக பலியாகிவிட்டது. இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க, நாட்டின் அடித்தள மக்களிடம் இன்னும் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதை இந்த துயர சம்பவம் வெளிப்படுத்துகிறது.
