ஏப்.18ல் கோவையில் பிரதமர் மோடி பிரசாரம்

கோவை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை. கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தலால் தமிழகத்தில் பிரசாரம் தள்ளிப்போவதாக பாஜவினர் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரியில் தேர்தல் முடிந்தது. இதையடுத்து, தற்போது பிரதமர் மோடி கோவை வருகை உறுதியாகி இருக்கிறது. அதன்படி, வரும் 18ம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

மாலை 4 மணியளவில் நடக்க உள்ள கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி மற்றும் அவிநாசி தொகுதி உள்பட 11 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி பிரசார கூட்டத்திற்காக நேற்று பூமி பூஜை போடப்பட்டது. இதில், அதிமுக, பாஜ கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: