அருணாச்சல பிரதேச இடங்களுக்கு கற்பனை பெயர்கள் சூட்டுவதா: சீனாவுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சீனா புனை பெயர்களை சூட்டியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் நடவடிக்கையை கண்டித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,‘‘ பொய்க் கூற்றுக்களை முன்வைப்பதற்கும், ஆதாரமற்ற கதைகளை உருவாக்குவதற்கும் சீனா மேற்கொள்ளும் இதுபோன்ற முயற்சிகள், அருணாச்சல பிரதேசம் உட்பட இந்த இடங்களும் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்தன, இருக்கின்றன, எப்போதும் அப்படியே இருக்கும் என்ற மறுக்க முடியாத உண்மையை மாற்றிவிட முடியாது. சீனாவின் நடவடிக்கைகள், இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளை நிலைப்படுத்தவும் இயல்பாக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குத் தடையாக அமைகின்றன’ என்றார்.

Related Stories: