திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதத்திற்கான தரிசன டிக்கெட் ஒதுக்கீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதத்திற்கான பல்வேறு தரிசனம் டிக்கெட் மற்றும் அறை ஒதுக்கீடுகளின் குறித்து தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஒதுக்கீடு, ஏப்ரல் 18 அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

இந்த சேவை டிக்கெட்டுகளை, மின்னணு குலுக்கல் முறையில் பெறுவதற்காக, 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளை பெற குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 20ம் தேதி முதல் 22ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெறலாம். இதேபோன்று கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதீபாலங்கர சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

இதே சேவைக்கு விர்சூவல் டிக்கெட் சேவையில் பங்கேற்காமல் நேரடியாக சுவாமி தரிசனம் செய்வதற்கு 21ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும்.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகள் பெற 24ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே சுவாமி தரிசன டிக்கெட் அறைகள் பெற https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: