நகரப்பகுதிகளுக்கு இணையாக பேரூராட்சி, ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்

கோவை, பிப். 21: கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையம், இக்கரைபோளுவாம்பட்டி, மத்வரயாபுரம் ஆகிய ஊராட்சிபகுதிகளில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளையும்,  ஜாகீர் நாயக்கன்பாளையம், விராலியூர், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர்  ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளையும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பூலுவப்பட்டி பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீல் வடிவேலாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  இரு வகுப்பறைகள் கொண்ட தரை தளம் மற்றும் முதல் தளம், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி செம்மேட்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், மத்வராயபுரம் ஊராட்சி சிங்குபதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜாகீர் நாயக்கன்பாளையம், விராலியூர், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர்  ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசினார். அதனைத் தொடர்ந்து மத்வராயபரம் ஊராட்சி, சப்பானிமேடையில்  140 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Related Stories: