மான்டேகார்லோ டென்னிஸ் செமிபைனலில் சின்னர்

ரோக்புரூன் கேப்மார்டின்: பிரான்ஸ் நாட்டின் ரோக்புரூன் கேப்மார்டின் நகரில் மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், கனடாவை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸிமே மோதினர். போட்டியின் முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.

தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர், அந்த செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் நேற்று, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், பிரேசில் வீரர் ஜாவோ ஃபொன்ஸேகாவை, 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் அரையிறுதியில் சின்னர் – ஸ்வெரெவ் மோதவுள்ளனர்.

Related Stories: