குத்து சண்டையில் விஷ்வநாத்துக்கு தங்கம்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், மங்கோலியா நாட்டின் உலான்பாடர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 50 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விஷ்வநாத் சுரேஷ், ஜப்பான் வீரர் டாய்சி இவாய் உடன் மோதினார்.

இப்போட்டியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீரரை அவர் வீழ்த்தினார். இதன் மூலம், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச், 2-3 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் வீரர் ஒராஸ்பெக் அஸில்குலோவிடம் தோல்வியை தழுவினார்.

Related Stories: