பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அதிரடி வெற்றி

கவுகாத்தி: ஐபிஎல் 19வது தொடரின் 16வது போட்டி கவுகாத்தியில் நேற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடந்தது. மழையால் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீசியது. பெங்களூரு அணியில் துவக்க ஆட்டக்காரரான பில் சால்ட், முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தேவ்தத் படிக்கல், கோஹ்லி இணை 45 ரன் சேர்த்த நிலையில், படிக்கல் அவுட்டானார்.

கோஹ்லி 32 ரன், க்ருணால் பாண்ட்யா , ஜிதேஷ் சர்மா அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். டிம் டேவிட் 13 ரன், ஷெப்பர்டு 22 ரன், அதிரடியாக ஆடிய பட்டிதார் 63 ரன்னிலும் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா தலா 2, சந்தீப் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

2வது இன்னிங்சை துவங்கிய ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 202 ரன் இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 78 ரன் விளாசி அவுட்டானார். ஜெய்ஷ்வால், ஹெட்மேயர், ரியான் பராக் நிலைத்து ஆடவில்லை. துருவ் ஜுரேல் 81 ரன், ஜடேஜா 24 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். ஹேசில்வுட், க்ருணால் பாண்ட்யா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: