சில்லி பாய்ன்ட்…

* சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், பந்துகள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது. முதல் முறை தவறு நிகழ்ந்துள்ளதால், குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது. அப்போட்டியில் குஜராத் அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்தது.

* இந்தியாவுடன் டெஸ்ட் ரஷித் கான் சந்தேகம்
புதுடெல்லி: இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வரும் ஜூன் மாதம், முல்லன்பூரில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தென் ஆப்ரிக்காவில் வரும் 2027ம் ஆண்டு, உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளதால், அதற்கேற்ப உடல் திறனை பேணும் நோக்கில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் ஆடமாட்டார் என தெரிகிறது. கடந்த 2023ல் நடந்த உலகக்கோப்பை போட்டிகளின்போது, கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்துக்காக ரஷித் கான் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* பார்சிலோனாவை வீழ்த்திய மாட்ரிட்
பார்சிலோனா: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து காலிறுதிச் சுற்றின் முதல் நிலை போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த பார்சிலோனா – அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. இப்போட்டியின் துவக்கம் முதல் மாட்ரிட் வீரர்கள் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 45வது நிமிடத்தில் அந்த அணியின் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோல் போட்டார். அவரைத் தொடர்ந்து, மாட்ரிடின் அலெக்சாண்டர் சோர்லோத், 70வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டார். மாறாக, பார்சிலோனா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. எனவே, 2-0 என்ற கோல் கணக்கில் மாட்ரிட் அபார வெற்றி பெற்றது.

Related Stories: