மான்டேகார்லோ டென்னிஸ்: காலிறுதியில் சின்னர்

ரோக்புரூன் கேப்மார்டின்: பிரான்சின் ரோக்புரூன் கேப்மார்டின் நகரில் மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் தோமாஸ் மகாச் உடன் மோதினார். இப்போட்டியின் துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சின்னர், முதல் செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து அட்டகாசமாக ஆடிய மகாச், 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் வென்றார். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் வசப்படுத்தினார். அதனால் 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஜிஸோ பெர்க்ஸ் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்வெரெவ், 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related Stories: