சாத்தூர்: வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளிலேயே பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்தானதால் நயினார் நாகேந்திரன் அப்செட் ஆனார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் முடிவடைந்தபின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாலை 4 மணி முதல் சாத்தூர் நகர் பகுதியில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார் என்று முதலில் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் நிகழ்ச்சி ரத்தானது.
பின்னர் மாலை 5 மணி முதல் ஒன்றிய பகுதியான மேட்டமலை, சின்னக்காமன்பட்டி, கோணம்பட்டி பகுதிகளில் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் கூட்டணி கட்சியான அதிமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதல்நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்தானதால் நயினார் அப்செட் ஆனார்.
