விஜய் வராரு…2 வரி பேசுறாரு…போறாரு… அப்புறம் எப்படி ஓட்டு வாங்குவாரு?: கார்த்தி சிதம்பரம் கலாய்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக விஜய்யிடம் உள்ள ரசிகர் மன்றம் அரசியல் களத்தில் சோதிக்கப்படாத ஒன்று. எந்த ஒரு தேர்தலையும் சந்தித்தது கிடையாது. ஒரு ரசிகர் கூட்டம் வருகிறது. அவர்கள் அரசியல் நிலையில் இருந்து வருகிறார்களா? அரசியலுக்கு அப்பாற்பட்டு வருகிறார்களா என தெரியவில்லை. அவர் படத்தை நான் பார்த்தது கிடையாது. அவருக்கு என்ன மாதிரியான ரசிகர்கள் உள்ளார்கள் என தெரியாது. இந்த தேர்தலுக்கு பிறகு பார்க்கலாம்.

விஜய் வருகிறார். இரண்டு வரிகள் பேசுகிறார். செய்தியாளர்களை சந்தித்தது கிடையாது. பேட்டி கொடுத்தது கிடையாது. பொது அறிவாளிகளுடன் விவாதம் செய்தது கிடையாது. அவருடைய சமுதாய பார்வையை வெளிப்படுத்த வேண்டும். எதையுமே வெளிப்படுத்தாமல் இந்த வாக்கை வாங்க போகிறார்கள், அந்த வாக்கை வாங்க போகிறார்கள் என்பதெல்லாம் என்னை பொறுத்த வரை ஊகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: