சிவகங்கை: சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார். அவர் சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் தனது வேட்புமனுவினை நேற்று தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணி இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவர் இரட்டை வேடத்தில் ஆஸ்கர் விருது வாங்கியவர். திமுக கூட்டணியை குறை கூறுவதற்கு முன், அவர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
