பேராவூரணி, ஏப். 6: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர் கிராமத்தில் முளைப்பாரி விழாவில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பக்தர்கள் கலசங்களை 100% சதம் என காட்சிப்படுத்தியிருந்தது வாக்காளர்களை கவர்ந்தது. பள்ளத்தூர் கதலிவனேஸ்வரர் ஆலய முளைப்பாரி விழாவில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வண்ணம் பக்தர்கள் கலசங்களை 100% என அடுக்கி வைத்திருந்தது வாக்காளர் கவனத்தைக் கவர்ந்ததோடு தேர்தல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் விதமாக உங்கள் வாக்கு உங்கள் உரிமை, வாக்களிப்பது நமது கடமை, 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள் வாக்காளர்களுக்கு வழங்கி தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
