நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது

நித்திரவிளை, ஏப்.8: நித்திரவிளை அருகே வாகன சோதனையில் இரண்டே கால் லட்சம் ரூபாய் சிக்கியது. கிள்ளியூர் தாலுகா தேர்தல் பறக்கும் படை அதிகாரி மஹாலக்ஷ்மி மற்றும் போலீசார் நேற்று இரவு 7.45 மணியளவில் நித்திரவிளை பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, டெம்போவில் இருந்த நபரிடம் இரண்டே கால் லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அவரிடம் பணம் குறித்து விசாரணை நடத்திய போது, கர்நாடகா மாநிலம் மங்களூர் உல்லால் பகுதியை சேர்ந்த சங்கன்னா என்றும், தேங்காபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சென்று ஒரு விசைப்படகை வாங்கி விட்டு, மீதி இரண்டே கால் லட்சம் ரூபாயை திரும்ப கொண்டு போவதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரி மஹாலக்ஷ்மி, சங்கன்னாவிடம் இருந்து பணத்தை கைப்பற்றி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

 

Related Stories: