தூத்துக்குடியில் திமுக கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்

தூத்துக்குடி, ஏப். 8:தூத்துக்குடி பூபாலராயர்புரம் 4வது தெருவை சேர்ந்தவர் மரிய அந்தோணி (50). இவரது மனைவி ஜெபஸ்டின் சுதா. இவர், தூத்துக்குடி மாநகராட்சி 9வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அஜித். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த மரிய விஜய் (31), மரிய பிடலிஸ் சஞ்சய் (23). தூத்துக்குடி அன்னை தெரசா மீனவர் காலனியைச் சேர்ந்த லிஸிங்டன் (25), இதே பகுதியைச் சேர்ந்த கிளிண்டன் (28) ஆகியோர் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் அஜித் பைக்கை அடித்து நொறுக்கினர்.

இதனை மரிய அந்தோணி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் கும்பல் மரிய அந்தோணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மரிய விஜய், மரிய பிடலிஸ் சஞ்சய், லிஸிங்டன், கிளிண்டன் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

 

Related Stories: