மார்த்தாண்டம், ஏப். 8: மார்த்தாண்டம் அருகே மருதம்கோடு, கோட்டவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லசுவாமி(65) மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் அருகில் உள்ள ஆனைவட்டம் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது மருமகனான மணிகண்டன்(31) குளத்திற்கு தேடி சென்றுள்ளார்.
அப்போது, குளத்தின் படித்துறையில் செல்லசுவாமி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து மணிகண்டன் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் செல்லசுவாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
