விசிக நிர்வாகி வீட்டில் ஐடி திடீர் சோதனை

செங்கோட்டை: தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த புளியரை அருகே புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக அணி மாநில துணை அமைப்பாளராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று காலை வருமானவரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இந்த சோதனையில் அவரது வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக மோசஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பணமோ, ஆவணங்களோ எதுவும் சிக்கவில்லை என தெரிகிறது.

Related Stories: