அ.தி.ம.மு. கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019 முதல் தமிழகத்தில் மதசார்பற்ற திமுக தலைமையிலான கூட்டணியை சனாதன மதவாத சனபுரிவார் கூட்டத்தை அரசியலில் கால் பதிக்க விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரித்து வந்தது.

நாங்கள் திமுகவிடம் தேர்தலில் போட்டியிட மூன்று தொகுதிகள் கேட்டிருந்தோம், அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. டெல்லி அணியை எதிர்ப்பதற்காக தமிழ்நாடு அணியில் இணைந்து இருக்கிறோம். என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் திமுகவுக்கு எங்களின் ஆதரவு. அதேபோல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், தற்குறி தவெகவிற்கு எங்களது ஆதரவு இல்லை. திமுக கூட்டணி கட்சிகளுக்கும் திமுகவினருக்கும் நாங்கள் முழு ஆதரவை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: