திமுகவை எவராலும் வீழ்த்த முடியாது: செங்ஸ் ஒப்புதல்

கோபி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக இயக்கத்திற்காக 45 ஆண்டுகாலம் பாடுபட்டவன் நான். ஆனால், துளியும் யோசிக்காமல் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்தார்கள்.

அரசியல் வரலாற்றில் யாரை அடையாளம் காட்டினேனோ அவரே என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்து இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு நான் உழைத்த உழைப்பு என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அரும்பணியாற்றி இருக்கிறேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை தவிர திமுகவை எவராலும் வீழ்த்த முடியாது. மற்றவருக்கு அந்த தகுதி இல்லை என்பதை என்டிஏ கூட்டணியில் இருக்கிற அத்தனை பேரும் அறிவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: