வீட்டின் பெண் உரிமையாளரை மிரட்டிய வழக்கு 3 மாத நிபந்தனை ஜாமீன் முடிந்து ஆஜராகாத யூடியூபர் வராகி மீண்டும் கைது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் நடவடிக்கை

சென்னை: தி.நகர் பகுதியில் யூடியூபர் வராகி (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து வார் ரூம் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடித்தி வருகிறார். இதற்கிடையே வாடகை வீட்டை நில மோசடி பதிவுகள் மற்றும் பணம் பறித்தல் சம்பவத்திற்கு பயன்படுத்துவதாக கூறி, வீட்டை வாடகைக்கு கொடுத்த பெண் யூடியூபர் வராகியிடம் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வராகி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் வராகி மீது புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்திய போது, யூடியூபர் வராகி (எ) கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பெண் உரிமையாளரை மிரட்டி வீட்டை அபகரிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும், வராகி மீது சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வராக இருந்த தேரணிராஜனிடம் கொரோனா காலத்தில் மோசடி செய்வதாக செய்திகள் போடுவேன் என்று மிரட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது, போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்தது உள்பட மொத்தம் 15 வழக்குகள் வராகி மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் யூடியூபர் வராகி மீது கொலை மிட்டல், ஆபாசமாக பேசுதல், பெண்களை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மாதம் கால உத்தரவாதப்படி இடைக்கால ஜாமீனில் வராகி வெளியே வந்தார். அதன் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மார்ச் 30ம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் முடிவடைந்தது. ஆனால், வராகி காவல் நிலையத்தில் சரண்டர் ஆகாததால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாண்டி பஜார் போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக வராகியை கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: