அதிமுக துணை பொது செயலாளர்,அமைச்சர் முன்னிலையில் பெரம்பலூரில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

பெரம்பலூர், ஏப். 2: அதிமுக (ஓபிஎஸ் அணி) மாவட்ட துணைச் செயலாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூரில் திமுக துணை பொதுச்செயலாளர் இராசா, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக (ஓபிஎஸ் அணி) பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் நகராட்சிக் கவுன்சிலருமான முகமது இக்பால் என்பவர் தலைமையில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த50க்கும் மேற்பட்ட அஇஅதிமுக நிர்வாகிகள், பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்து, அங்கிருந்த திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா எம்பி, முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரது முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது திமுக மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், இராஜேந்திரன், எம்எல்ஏ பிரபாகரன், மாவட்டத் துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன் சம்பத், ஒன்றியச் செயலாளர்கள் ராஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், ஜெகதீஸ்வரன்,
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி கருணாகரன்,

முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் பிரபா செல்லபிள்ளை, ராமலிங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க கமல், மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனா அசோக் குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப் பாளர் மணிவாசகம், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்வ லட்சுமி, நகராட்சிக் கவுன்சிலர்கள் பாரி, ஜெயப் பிரியா, சித்தார்த்தன், நகர துணைச்செயலாளர் சபியுல்லா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

 

Related Stories: