புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து தொழிலாளர்கள் போராட்டம்

பெரம்பலூர், ஏப். 2: பெரம்பலூரில் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு பிஜேபி அரசால் அமல்படுத்தப்பட்ட நாளை கருப்புநாளாக அறிவித்து மத்திய தொழிற் சங்கம் சார்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு பிஜேபி அரசால் கடந்த 2025 நவம்பர் 22ம் தேதி கொண்டு வரப்பட்டு, 2026 ஏப்ரல் 1ம்தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை கருப்புநாளாக அறிவித்து, மத்திய தொழிற் சங்கம் சார்பாக, பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு காந்தி சிலை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் தலைமையில், எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே.குமார், ஹெச்.எம்.எஸ் மாவட்ட நிர்வாகி நீலமேகம், ஏஐடியுசி சார்பாக ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வி, பெரியசாமி, ரெங்கராஜ், சிவக்குமார், ஆறுமுகம் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: