வேதாரண்யம், ஏப். 2: வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்கும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அலுவலக ஊழியர்களுக்கு ரங்கோலி சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்தல் தொடர்பான மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அலுவலக ஊழியர்களால் ரங்கோலி கோலங்கள் தீட்டப்பட்டன.
சிறப்பான கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் ஜெயசீலன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர். 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த்துறை பணியாளர்களால் போடப்பட்ட இந்த ரங்கோலி கோலத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
