தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.2: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நலிவுற்ற தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் வீரசாமி வரவேற்றார். மாநில துணை தலைவர் சிவ.சசிகுமார் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். மாநில துணை செயலாளர் புதியவன், மாநில இளைஞர் அணி தலைவர் சக்திவேல், அரியலூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், உடையார்பாளையம் நகர செயலாளர் குருநாதன், அரியலூர் ஒன்றிய தலைவர் தனஞ்செயன் மற்றும் மாவட்ட ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பட்டுக்கோட்டையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைசெயலாளராக புதியவன், மாநில இளைஞர் அணி தலைவராக சக்திவேல், அரியலூர் மாவட்ட செயலாளராக வெங்கடேசன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

 

Related Stories: