அரியலூர் வட்டாரத்தில் உதவி இயக்குனர் வேளாண்மை கிடங்குகளில் ஆய்வு

ஜெயங்கொண்டம், ஏப்.2: அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி அறிவுரைப்படி வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் வேளாண்மை கிடங்குகளில் ஆய்வு செய்தார். அப்போது, கிடங்கு மேலாளர் ஜெயராஜ் மற்றும் உதவி விதை அலுவலர் பாரி ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்;

வேளாண்மை கிடங்கில் உயிர் உரங்கள் அசோஸ்பைரிலும், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, துத்தநாக பாக்டீரியா மற்றும் நுண்ணூட்ட உரங்கள் நிலக்கடலை பயிர், சிறுதானிய பயிர், எண்ணெய் வித்துக்கள் பயிர், கரும்பு பயிர் போன்ற பயிர்களுக்காக தனித்தனியாக நுண்ணூட்ட உரங்கள் போதுமான அளவில் உள்ளது. வம்பன் பத்து உளுந்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் .

உயிர் உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் வளத்தை அதிகப்படுத்தி சாகுபடி செலவை குறைத்து, சாகுபடி பண்ணும் பயிரிலிருந்து மகசூல் அதிகப்படுத்தலாம். பயிருக்கு ஏற்ற வகையில் நுண்ணூட்ட உரங்களை பயன்படுத்துவதால், பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதுடன், பயிரின் மகசூல் மிக அதிகமாவதோடு மட்டுமின்றி பயன்படுத்தப்படும் உரம் அளவை குறைப்பது மட்டு மில்லாமல் மண்ணின் வளம் அதிகப்படுத்தி அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories: