தேர்தல் கண்காணிப்புக்கான நாகை கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு

நாகப்பட்டினம், ஏப். 2: நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் சட்டசபை தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் செலவின பார்வையாளர் நர்சிங்குமார் கல்கோ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு தேர்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு, உரிய விளக்கங்களை கேட்டறிந்தார். மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகார்கள் குறித்தும் அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், அங்கு பணியாற்றுபவர்களிடம் கேட்டறிந்தார்.

 

Related Stories: