மதுரை, ஏப். 2: மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிந்துள்ளது. இதன்படி நேற்றைய விலை நிலவரம் வருமாறு: மல்லிகை கிலோ ரூ.700, பிச்சி ரூ.500, முல்லை ரூ.500, செவ்வந்தி ரூ.250, சம்பங்கி ரூ.120, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.800 , ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.350, மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்று) ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் முருகன் கூறும்போது, ‘‘விளைச்சல் அதிகம் என்பதால் தற்போது நாளொன்றுக்கு 4 டன் வரை பூக்களின் வரத்து இருக்கிறது. எனினும் பல்வேறு பகுதிகளிலும் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், ஓரளவு தேவை உள்ளது. இதன் எதிரொலியாக பூக்களின் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.
