லோடு வேன் மோதி முதியவர் பலி வந்தவாசி அருகே

வந்தவாசி, ஏப்.2: வந்தவாசி அருகே லோடு வேன் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(70). இவர் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர், சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லோடு வேன் சுப்பிரமணியன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் சுப்பிரமணியத்தை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி, பொன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: