வேட்புமனு தாக்கலுக்கு 200 போலீசார் பாதுகாப்பு

 

திருப்பூர், மார்ச் 31: திருப்பூரில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்கு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதிகளில் உள்ள அரசு அரசு அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்திலும், தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி மைய அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேட்பாளருடன் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், வேட்பாளர் அவருடன் வருபவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் உதவியோடு சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். அதே போல் பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபட்டனர்.

 

Related Stories: